Homeசெய்திகள்சினிமா'ஜெயிலர் 2' படத்தில் நடிப்பதை உறுதி செய்த மோகன்லால்?

‘ஜெயிலர் 2’ படத்தில் நடிப்பதை உறுதி செய்த மோகன்லால்?

-

- Advertisement -

ஜெயிலர் 2 படம் குறித்து நடிகர் மோகன்லால் பேசியுள்ளார்.'ஜெயிலர் 2' படத்தில் நடிப்பதை உறுதி செய்த மோகன்லால்?

கடந்த 2023ல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்ப பெற்று வசூலிலும் இமாலய சாதனை படைத்தது. பொதுவாக ரஜினி என்றாலே ரசிகர்கள் கொண்டாடி தீர்த்து விடுவார்கள். அதிலும் மோகன்லால், சிவராஜ் குமார் ஆகியோரின் கேமியோக்கள், ஜெயிலர் திரைப்படத்தை கூடுதல் ஸ்பெஷலாக மாற்றியது. எனவே ஜெயிலர் 2 திரைப்படத்திலும் மோகன்லால், சிவராஜ்குமார் முக்கியமான கேரக்டர்களில் நடிக்க வாய்ப்புள்ளதாக சமீபகாலமாக பல தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய மோகன்லால், ஜெயிலர் 2 படம் குறித்து பேசி உள்ளார். அவர் பேசியதாவது, “நிறைய தமிழ் படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் நான் எம்புரான் போன்ற படங்களில் பிஸியாக இருந்ததால் அது நடக்கவில்லை. இப்பொழுது ஜெயிலர் 2 ஆரம்பித்துவிட்டது. அவர்கள் என்னை அழைத்தால் நான் போவேன்” என்று தெரிவித்துள்ளார். இதன்மூலம் ஜெயிலர் 2 படத்தில் தான் நடிப்பதை மோகன்லால் மறைமுகமாக உறுதி செய்துள்ளார் என்று பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

நெல்சன், ரஜினி, அனிருத் கூட்டணியில் உருவாகும் ஜெயிலர் 2 படத்தினை ஜெயிலர் முதல் பாகத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் ரஜினி இப்படத்தில் இணைவார் என்றும் மற்ற நடிகர்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ