நடிகர் தனுஷ் கடைசியாக ராயன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதே சமயம் குபேரா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார் தனுஷ். இந்நிலையில் தான் இவர், இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து நித்யா மேனன், ஷாலினி பாண்டே, சத்யராஜ், ராஜ்கிரண், அருண் விஜய் ஆகியோர் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதிலும் அருண் விஜய் இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகி வருகின்றன. டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். கிரண் கௌஷிக் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்னதாக தேனி பகுதியில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதைத்தொடர்ந்து பொள்ளாச்சி போன்ற பகுதிகளிலும் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது.
அடுத்தது இந்த படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் 2024 நவம்பர் மாதத்திற்குள் முடித்துவிட படக்குழு திட்டமிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகை ஷாலினி பாண்டே, தனுஷுக்கு ஜோடியாக நடிக்கிறார் என புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகையினால் நித்யா மேனனின் கதாபாத்திரம் என்னவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. விரைவில் மற்ற அப்டேட்டுகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -