Homeசெய்திகள்சினிமா'சர்தார் 2' படத்தில் இவங்க தான் கதாநாயகியா?

‘சர்தார் 2’ படத்தில் இவங்க தான் கதாநாயகியா?

-

நடிகர் கார்த்தி ஜப்பான் படத்திற்கு பிறகு மெய்யழகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். அதே சமயம் நலம் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். 'சர்தார் 2' படத்தில் இவங்க தான் கதாநாயகியா?அடுத்ததாக கார்த்தி சர்தார் 2 திரைப்படத்தில் நடிக்க உள்ளார். அக்டோபர் மாதத்தில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்திருந்த சர்தார் திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றதால் சர்தார் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. மேலும் சர்தார் 2 திரைப்படம் தொடங்குவது சம்பந்தமான தகவல்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. அதன்படி கார்த்தியின் 28 வது படமாக உருவாகும் சர்தார் 2 திரைப்படமானது போதை பொருள் சம்பந்தமான கதை களத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைப்பாளராக கமிட்டாகியுள்ளார் என்றும் தகவல் வெளியாகி வருகின்றனர். 'சர்தார் 2' படத்தில் இவங்க தான் கதாநாயகியா?இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் ஆஷிகா ரங்கநாத் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. மேலும் சர்தார் டு படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் சென்னையில் தொடங்க இருப்பதாகவும் இதற்கான செட் வேலைகள் நடைபெற்று வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

ஆஷிகா ரங்கநாத் அதர்வா நடிப்பில் வெளியான பட்டத்து அரசன் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ