நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து கல்லூரி, அயன், சிறுத்தை, வேங்கை போன்ற வெற்றி படங்களில் நடித்துள்ளார். அதன்படி சூர்யா, விஜய், அஜித், தனுஷ், ஜெயம் ரவி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். கடைசியாக இவர் ரஜினி நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படத்தில் கேமியா ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தில் கவாலா எனும் பாடல் ஒன்றுக்கு நடனமாடி இருப்பார் தமன்னா. இப்பாடல் பட்டி தொட்டி எங்கிலும் பட்டய கிளப்பியது. ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான நிலையில் அதற்கு முன்னதாக படத்தின் ப்ரோமோஷனுக்கு இந்த காவாலா பாடல் பெரிதும் உதவியாக இருந்தது. அதேசமயம் இந்த பாடலில் நடனமாடியதற்காக நடிகை தமன்னாவிற்கு ஒரு கோடி முதல் ஒன்றரை கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாம். இந்நிலையில் அடுத்ததாக மற்ற படங்களில் பாடல் ஒன்றுக்கு தமன்னாவை நடனம் ஆட கேட்டிருக்கிறார்கள். எனவே ஜெயிலர் படத்திற்கு பிறகு தனது சம்பளத்தை 5 கோடியாக உயர்த்திவிட்டராம் தமன்னா. அதுமட்டுமல்லாமல் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு தான் தான் காரணம் என்றும் கூறி வருகிறாராம்.