Homeசெய்திகள்சினிமா'கூலி' பட பிரச்சனை முடிவுக்கு வந்ததா?.... இளையராஜா - ரஜினி எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்!

‘கூலி’ பட பிரச்சனை முடிவுக்கு வந்ததா?…. இளையராஜா – ரஜினி எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்!

-

நடிகர் ரஜினி வேட்டையன் படத்திற்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். 'கூலி' பட பிரச்சனை முடிவுக்கு வந்ததா?.... இளையராஜா - ரஜினி எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்!இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் சாஹிர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் படத்தை அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டு வருகிறது. அதேசமயம் வருகின்ற ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு கூலி படத்திலிருந்து தரமான அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையில் கூலி படத்தின் அறிவிப்பு வெளியாகும் போது அந்த டீசரில் ரஜினி நடிப்பில் வெளியான தங்கமகன் படத்தில் இளையராஜா இசையமைத்திருந்த ‘வா வா பக்கம் வா’ என்ற பாடல் மறு உருவாக்கம் செய்யப்பட்டிருந்தது. இது இளையராஜாவிடம் அனுமதி பெறாமல் பயன்படுத்தப்பட்டிருப்பதாக இளையராஜா, கூலி படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். 'கூலி' பட பிரச்சனை முடிவுக்கு வந்ததா?.... இளையராஜா - ரஜினி எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்!இது படக்குழுவினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து ரஜினியிடம் செய்தியாளர்கள் இது தொடர்பாக கேள்வி எழுப்பிய போதும் நடிகர் ரஜினி, அந்த விஷயத்திற்கும் தனக்கும் சம்பந்தமில்லை எனவும் அதை தயாரிப்பு நிறுவனம் பார்த்துக்கொள்ளும்
எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது இளையராஜாவும் ரஜினியும் சந்தித்து பேசியுள்ள நிலையில் இருவரும் எடுத்துக்கொண்ட புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது. எனவே இந்த புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் பலரும் கூலி படத்தின் பிரச்சனை முடிவுக்கு வந்தது என்று தங்களின் கருத்துக்களை கமெண்ட் செய்து வருகின்றனர்.

MUST READ