ராஜமௌலி இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படம் ஆர் ஆர் ஆர். ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரும் இணைந்து நடித்த இப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்து அதிக வசூலை பெற்றுத் தந்து சாதனை படைத்தது. மேலும் பல்வேறு விருதுகளையும் அள்ளியுள்ளது.
இதன் மாபெரும் வெற்றிக்குப் பிறகு ராம்சரண், சங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் படத்தில் நடித்து வருகிறார். அதே சமயம் ஜூனியர் என்டிஆர், கொரட்டலா சிவா இயக்கும் தேவரா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். ஜூனியர் என்டிஆர் உடன் இணைந்து சைஃப் அலிகான், பிரகாஷ்ராஜ், கலையரசன், ஜான்விகபூர் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தை நந்தமுரி தரகா ராமராவ் ஆர்ட்ஸ் மற்றும் யுவசுதா ஆர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் படத்தின் கிளிம்ஸ் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்தியது. மேலும் இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர், இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்படுகிறது. அதேசமயம் இப்படம் 2024 ஏப்ரல் மாதத்தில் வெளியாகப் போவதாகவும் செய்திகள் வெளியானது. இந்நிலையில் படத்தில் VFX பணிகளில் ஏற்படும் தாமதத்தால் தேவரா படத்தின் ரிலீஸ் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதிக்கு ஒத்திவைக்கப்பட இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.