ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து வை ராஜா வை எனது திரைப்படத்தையும் இயக்கி இருந்தார். தற்போது இவர் லால் சலாம் எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரஜினிகாந்த் மொய்தின் பாய் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ரஜினிக்கு ஜோடியாக நிரோஷா நடித்துள்ளார். கிரிக்கெட் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவு பெற்று தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படத்தின் டீசர் மற்றும் அதைத் தொடர்ந்து முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் லால் சலாம் படமானது பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் இப்படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் ஜனவரி 26க்கு ஒத்திவைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு வெளியாகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.