நடிகர் கார்த்தி ஜப்பான் படத்திற்கு பிறகு, தனது 26 ஆவது படத்தை நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். அதே சமயம் 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். கார்த்தி 27 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தை சூர்யாவின் 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார். இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஈரமான ரோஜாவே 2 தொடர் நாயகி சுவாதி கொண்டே படத்தில் கதாநாயகியாக நடிப்பதாகவும் நடிகை ஸ்ரீதிவ்யா இதில் கார்த்திக்கு தங்கையாக நடிப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இப்படம் குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகி வருகிறதாம். அதுமட்டுமில்லாமல் இந்த படத்திற்கு மெய்யழகன் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. படத்தின் படப்பிடிப்புகள் கும்பகோணம், காரைக்குடி, வேலூர் உள்ளிட்ட படங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் கார்த்தி, தனது போர்ஷனை முடித்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. அதேசமயம் ஒரு சில காட்சிகள் மட்டும் இன்னும் படமாக்கப்பட இருப்பதாகவும், விரைவில் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைய உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன.
- Advertisement -