பாலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் வணங்கான். இந்த படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் சூர்யாவின் தயாரிப்பிலும் , நடிப்பிலும் உருவாகி வந்த நிலையில் ஒரு சில காரணங்களால் சூர்யா இதிலிருந்து வெளியேறினார். அதன் பின்னர் அருண் விஜயை வைத்து பாலா இத்திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். வி ஹவுஸ் ப்ரோடக்ஷன் நிறுவனத்தின் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்புகள் கன்னியாகுமரி போன்ற இடங்களில் படமாக்கப்பட்டது. ஏற்கனவே இதன் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக படத்தின் டீசரை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர். இந்த டீசரின் மூலம் நடிகர் அருண் விஜய் மாறுபட்ட பரிமாணத்தில் நடித்திருப்பது தெரிய வந்தது. அதேசமயம் வணங்கான் படத்தில் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருகிறது. இந்நிலையில் வணங்கான் படத்தின் டைட்டில் மாற்றப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது ஏற்கனவே கேமராமேன் சரவணன் என்பவர் வணங்கான் எனும் திரைப்படத்தை உருவாக்கி அந்த படத்தின் டீசரையும் சென்சாருக்கு அனுப்பி பதிவு செய்துவிட்டாராம். அதே சமயம் பாலாவும் வணங்கான் திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஆதலால் வணங்கான் என்ற தலைப்பில் ஒரு படம் பதிவு செய்யப்பட்டுள்ளதால் இந்த படத்தின் தலைப்பை பாலாவின் வணங்கான் என்று மாற்றி வைக்க வாய்ப்புள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பை படக்குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -