நடிகர் கவின் டாடா படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் மாஸ்க், பிளடி பெக்கர், கிஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இதற்கிடையில் ப்யார் பிரேமா காதல் பட இயக்குனர் இளன் இயக்கத்தில் ஸ்டார் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார் கவின். இதை கவின் உடன் இணைந்து லால், கீதா கைலாசம், ப்ரீத்தி முகுந்தன், ஆதிதி பொஹங்கர், லொள்ளு சபா மாறன் போன்ற பலரும் நடித்திருந்தனர். ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்த நிலையில் யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் இந்த படம் கடந்த மே 10ம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. ஒரு இலக்கை நோக்கி செல்லும் இளைஞன் ஒருவன் தனது வாழ்வில் ஏற்படும் சிக்கல்களை எப்படி கடந்து வருகிறான் என்பதன் அடிப்படையில் இந்த படம் உருவாகி இருந்தது. இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும் வசூலில் சற்று பின்தங்கியுள்ளது.
அதாவது கடந்த மே 3ஆம் தேதி வெளியான அரண்மனை 4 திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால் கவின் நடிப்பில் வெளியான ஸ்டார் திரைப்படம் தற்போது வரை மொத்தமாக 25 கோடி வரை தான் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இந்த படம் 7 கோடி பட்ஜெட்டில் உருவான நிலையில் தற்போது அதற்கு அதிகமாக வசூல் செய்து தந்திருப்பதால் இந்த படம் ஹிட் படம் தான் என்று சொல்லப்படுகிறது. இனி வரும் நாட்களில் இந்த படம் எத்தனை கோடி வரை வசூல் செய்து தருகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
- Advertisement -