தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் தனுஷ் தற்போது படங்களில் நடிப்பது மட்டுமல்லாமல் படம் இயக்குவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார் அந்த வகையில் தனது ஐம்பதாவது திரைப்படத்தில் தானே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதையும் முடித்துவிட்டு புதிதாக இன்னொரு படத்தையும் இயக்கி வருகிறார் தனுஷ். இப்படத்தில் டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று மாலை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன்படி இந்த புதிய படத்திற்கு நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா வாரியர், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இப்படம் வழக்கமான காதல் கதை என்றும் தலைப்பின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது எனவும் கூறப்படுகிறது.
#NilavukkuEnmelEnnadiKobam story written by #Dhanush ✍️
Previously it was supposed to be directed by #SoundaryaRajinikanth, but now Dhanush himself directing it🤝🎬pic.twitter.com/FeGiEurGEg
— AmuthaBharathi (@CinemaWithAB) December 24, 2023
இந்நிலையில் தனுஷ் எழுதி இயக்கி வரும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் திரைப்படத்தை முதலில் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தான் இயக்க இருந்தாராம். கடந்த 2016 இல் நடந்த பேட்டி ஒன்றில் இப்படம் குறித்து பேசி இருக்கிறார். அதே சமயம் இப்படத்தில் நடிக்கும் நடிகர்களை தேர்வு செய்வதற்காக அழைப்பு போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சௌந்தர்யா ரஜினிகாந்த் ஏற்கனவே விஐபி 2 கோச்சடையான் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.