Homeசெய்திகள்சினிமாபிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898AD' படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுவா?

பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898AD’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுவா?

-

- Advertisement -

ராஜமௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898AD' படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுவா?இவர் கடைசியாக பிரசாந்த் நீல் இயக்கிய சலார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் வசூல் ரீதியாக அடித்து நொறுக்கி சாதனை படைத்தது.
அதைத்தொடர்ந்து பிரபாஸ், கல்கி 2898AD திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்க வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் டைம் ட்ராவல் சம்பந்தமான கதை களத்தில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களின் நடிக்கின்றனர். நடிகர் கமல்ஹாசனும் இவர்களுடன் இணைந்து நடித்துள்ளார். ஆனால் கமல்ஹாசனின் கதாபாத்திரம் வில்லன் கதாபாத்திரம் என்று ஏற்கனவே சொல்லப்பட்டது. பின்பு கமல்ஹாசன் பேட்டி ஒன்றில் அது கெஸ்ட் ரோல் என்று கூறியிருந்தார். எனவே ரசிகர்கள் கமல்ஹாசனின் கதாபாத்திரம் வில்லன் ரோலா அல்லது கெஸ்ட் ரோலா என்ற குழப்பத்தில் இருந்து வருகின்றனர். பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898AD' படத்தின் புதிய ரிலீஸ் தேதி இதுவா?இது ஒரு பக்கம் இருந்தாலும் கமல்ஹாசன் இந்த படத்தில் நடித்திருப்பது எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இதற்கிடையில் கல்கி திரைப்படமானது மே 9ஆம் தேதி வெளியாகும் என்று பட குழுவினர் அறிவித்திருந்தனர். ஆனால் தேர்தல் காரணமாக இந்த படம் 2024 மே 30ஆம் தேதி வெளியாகும் என்று புதிய தகவல் கிடைத்துள்ளது. இருப்பினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ