லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்தாண்டு அக்டோபர் மாதத்தில் வெளியான திரைப்படம் தான் லியோ. இந்த படத்தில் விஜயுடன் இணைந்து சஞ்சய் தத், திரிஷா, அர்ஜுன், மடோனா செபாஸ்டியன் மன்சூர் அலிகான், கௌதம் மேனன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த படத்தின் முதல் பாதி நல்லா வரவேற்பை பெற்ற நிலையில் இரண்டாம் பாதி பல்வேறு தரப்பினரிடையே எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது. இருப்பினும் இப்படம் 627 கோடிக்கு மேல் வசூல் செய்து இண்டஸ்ட்ரி ஹிட் அடித்தது. இந்த படத்தில் நடிகர் அர்ஜுன், விஜய்க்கு சித்தப்பாவாக நடித்திருந்தார். அதன்படி நடிகர் அர்ஜுன், ஹரோல்ட் தாஸ் எனும் பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் பெரிய அளவில் ரசிகர்களை கவரவில்லை. இந்நிலையில் ஹரோல்ட் தாஸாக முதலில் நடிக்க இருந்தது வேறொரு நடிகராம். அந்த நடிகர் வேறு யாருமில்லை மைக் மோகன் தான் என்று சொல்லப்படுகிறது. அதாவது நடிகர் மைக் மோகன், 1970 முதல் 90 கால கட்டங்களில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்தவர். அதன் பின்னர் சினிமாவிலிருந்து சில காலம் விலகியிருந்த இவர் ஹரா எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். அதைத்தொடர்ந்து தற்போது விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கி வரும் கோட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். கோட் படத்தில் நடிப்பதற்காக மைக் மோகன், அந்த கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்க வேண்டும் என கண்டிஷன் போட்டு தான் விஜய் படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. எனவே லியோ படத்தில் அர்ஜுன் கதாபாத்திரத்தை விட கோட் படத்தில் மைக் மோகன் கதாபாத்திரம் ஸ்ட்ராங்கான கதாபாத்திரமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அவருடைய கதாபாத்திரம் வில்லன் கதாபாத்திரமா? அல்லது வேறு கதாபாத்திரமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.