பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படத்தில் நடித்துள்ள சர்ப்ரைஸ் கேமியோ யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.லவ் டுடே படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்ஐகே எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் எனும் திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். பிரதீப் ரங்கநாதன் இந்த படத்தில் கல்லூரி மாணவனாக நடித்திருக்கும் நிலையில் அவருடன் இணைந்து அனுபமா பரமேஸ்வரன், கயடு லோகர், மிஸ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர்.
ஓ மை கடவுளே படத்திற்கு பிறகு அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் சமீபத்தில் இதன் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது. படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. எனவே இப்படம் வருகின்ற பிப்ரவரி 21 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. இந்நிலையில் டிராகன் திரைப்படத்தில் மிகப்பெரிய கேமியோ ஒன்று இருப்பதாக சமீபத்தில் அஸ்வத் மாரிமுத்து பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். அதாவது ஏற்கனவே சினேகா கேமியோ ரோலில் நடித்திருந்தார் என்பது ட்ரெய்லரில் தெரியவந்தது. அடுத்தது நடிகர் சிம்பு படத்தில் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார் என சொல்லப்பட்ட நிலையில் அஸ்வத் மாரிமுத்து அதை மறுத்து இருந்தார்.
தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் அந்த மிகப்பெரிய, சர்ப்ரைஸ் ஆன கேமியோ நடிகை நயன்தாராவாக இருக்கும் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. அதாவது டிராகன் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் வரக்கூடிய இந்த கேமியோவை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம் எழுப்புவார்கள் என்றும் நம்ப தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அது நயன்தாராவா? இல்லையா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- Advertisement -