நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் உருவாகியிருந்த விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் வசூல் ரீதியாக வெற்றிப்பாதையில் நகர்ந்து கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. இதைத்தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் 2025 ஏப்ரல் 10 அன்று திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் நடிகர் அஜித் கார் பந்தயத்தில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார். அதன்படி கடந்த ஜனவரி மாதம் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் தனது ஆணியினருடன் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தை தட்டி தூக்கினார்.
இதன் பிறகு அடுத்தடுத்த கார் பந்தயத்தில் கலந்து கொள்ள உள்ளார் இதற்காக தனது உடல் எடையையும் கணிசமாக குறைத்து வருகிறார் அஜித். அந்த வகையில் தற்போது நடிகர் அஜித், தனது உடல் எடையை குறைத்து நம்ப முடியாத அளவிற்கு மாறி இருக்கிறார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. அடுத்தது இதை கண்ட ரசிகர்களும் ‘அஜித்தா இது? நம்பவே முடியலையே’ என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.
- Advertisement -