Homeசெய்திகள்சினிமா'ராயன்' படத்தில் அபர்ணா பாலமுரளியின் கதாபாத்திரம் இதுதானா?

‘ராயன்’ படத்தில் அபர்ணா பாலமுரளியின் கதாபாத்திரம் இதுதானா?

-

- Advertisement -

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ராயன். இந்த படம் தனுஷின் 50வது படமாக உருவாகி இருக்கும் நிலையில் தனுஷே இந்த படத்தை இயக்கியிருக்கிறார். 'ராயன்' படத்தில் அபர்ணா பாலமுரளியின் கதாபாத்திரம் இதுதானா?சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஏ ஆர் ரகுமான் படத்திற்கு இசையமைத்துள்ளார். ஓம் பிரகாஷ் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படமானது மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி இருக்கிறது. இதில் தனுஷ், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் ஆகியோர் அண்ணன் தம்பிகளாக நடித்துள்ள நிலையில் இவர்களுக்கு தங்கையாக துஷாரா விஜயன் நடித்திருக்கிறார். மேலும் படத்தில் வில்லனாக எஸ் ஜே சூர்யா நடித்துள்ளார். 'ராயன்' படத்தில் அபர்ணா பாலமுரளியின் கதாபாத்திரம் இதுதானா?இந்த படம் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. ஏற்கனவே படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்களும் அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வரும் நிலையில் நேற்று (ஜூலை 16) ராயன் படத்தின் மிரட்டலான ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் அபர்ணா பாலமுரளியின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நேற்று வெளியான ட்ரெய்லரில் அபர்ணா பாலமுரளியின் காட்சிகள் எதுவும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அபர்ணா பாலமுரளி ராயன் திரைப்படத்தில் மேகலா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். 'ராயன்' படத்தில் அபர்ணா பாலமுரளியின் கதாபாத்திரம் இதுதானா?இவர் சந்தீப் கிசனுக்கு வில்லியாக நடித்துள்ளார் என்று புதிய தகவல் வெளியாகி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியான வாட்டர் பாக்கெட் எனும் பாடல் சந்தீப் கிஷன், அபர்ணா பாலமுரளி இருவருக்குமான காதல் பாடலாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அபர்ணாவின் கதாபாத்திரம் எந்த மாதிரியான கதாபாத்திரம் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

MUST READ