நடிகர் தனுஷ் தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் குபேரா திரைப்படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முடிந்து விட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் வெளியிடப்படவில்லை. இதற்கிடையில் தனுஷ் தனது 50வது திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருந்தார். இதற்கு ராயன் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படமானது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஏ ஆர் ரகுமானின் இசையிலும் உருவாகி இருக்கிறது. இதில் தனுஷ், எஸ் ஜே சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், வரலட்சுமி சரத்குமார் என பல முக்கிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வருகின்ற ஜூலை 26 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் இசை வெளியீட்டு விழாவும் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இதற்கிடையில் அடுத்தடுத்த போஸ்டர்களும் பாடல்களும் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் ராயன் திரைப்படத்தில் தனுஷின் கதாபாத்திரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது படமானது கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகிறது என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தது. அதன்படி தனுஷ் கேங்ஸ்டராக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது தனுஷ் இப்படத்தில் ரகசிய போலீஸாக நடித்துள்ளார் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் படத்தின் டிரைலர் அடுத்த வாரம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -