Homeசெய்திகள்சினிமாகார்த்தி நடிக்கும் 'சர்தார் 2' படத்தின் கதை இதுதான்!

கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தின் கதை இதுதான்!

-

நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பல படங்களில் தொடர்ந்து பிஸியாக நடிக்க வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே கார்த்தி நடிப்பில் மெய்யழகன் வா வாத்தியாரே உள்ளிட்ட திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. அடுத்ததாக கார்த்தி சர்தார் 2 திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.கார்த்தி நடிக்கும் 'சர்தார் 2' படத்தின் கதை இதுதான்! இந்த படம் தொடர்பான அப்டேட்டுகள் கடந்த சில மாதங்களாகவே சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. ஏனென்றால் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அரசியல் பின்னணியில் ஸ்பை ஆக்சன் திரில்லர் சம்பந்தமான கதைக்களத்தில் வெளியான இந்த படம் இன்று வரையிலும் பேசப்படுகிறது. இதன் காரணமாகவே சர்தார் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்து அதிகமாக நிலவி வருகிறது. இந்நிலையில் சர்தார் 2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்று ரசிகர்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி இப்படத்தின் பூஜை மே மாதம் இறுதியில் நடைபெற இருப்பதாகவும் ஜூன் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் புதிய அப்டேட் கிடைத்துள்ளது. கார்த்தி நடிக்கும் 'சர்தார் 2' படத்தின் கதை இதுதான்!இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் சர்தார் 2 திரைப்படமானது போதைப் பொருள் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாக இருக்கிறதாம். அதாவது போதை பொருளுக்கு எதிரான படமாகவும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாகவும் தயாராக உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

MUST READ