இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் பாகம் 1 மற்றும் 2க்கு பிறகு கமல்ஹாசன் நடிப்பில் தக் லைஃப் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் தொடர்பான அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி படப்பிடிப்புகளும் நடைபெற்று வந்தது. தற்போது கமல்ஹாசன் அரசியலில் பிசியாக இருப்பதால் செர்பியாவில் நடைபெறும் படப்பிடிப்பு தற்போதைக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகியிருந்த துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி ஆகிய இருவரும் கால்ஷீட் பிரச்சனை காரணமாக தக் லைஃப் படத்திலிருந்து விலகினார்கள். அதேசமயம் இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு பதிலாக நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ஜெயம் ரவிக்கு பதிலாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்க உள்ளதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. ஏ ஆர் ரகுமான் இதற்கு இசை அமைக்கிறார். படத்தில் திரிஷா, கௌதம் கார்த்திக், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லக்ஷ்மி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.