தளபதி என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் விஜயின் 68வது படமாக உருவாகி இருந்த கோட் திரைப்படம் நேற்று (செப்டம்பர் 5) உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்திருந்தது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசை அமைத்திருந்தார். படத்தில் விஜய் தவிர பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் நடிகர்கள் மைக் மோகன் வில்லனாக நடித்திருந்தார். நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் ஹீரோவாகவும் வில்லனாகவும் மிரட்டி இருந்தார். இந்த படமானது திரையரங்குகளில் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காணச் சென்ற ரசிகர்களுக்கு விருந்து படைத்தது. அதேசமயம் படத்தில் இடம்பெற்ற ரஜினி, கமல், அஜித், தோனி ஆகியோரின் குறியீடுகள் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது. அதுபோல ஏஐ மூலம் கேப்டன் விஜயகாந்தின் கேமியோவும் கிளைமாக்ஸ்- இல் இடம்பெறும் திரிஷா, சிவகார்த்திகேயனின் கேமியோவும் திரையரங்கை அதிர வைத்தது. அதிலும் சிவகார்த்திகேயன் பேசிய வசனத்தை கேட்ட ரசிகர்கள் பலரும் விசில்களை பறக்க விட்டனர்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் விஜயிடம், “நீங்க இதைவிட முக்கியமான வேலையாக போறீங்க. நீங்க அதைப் பார்த்துக்கோங்க. நான் இதை பார்த்துக்கிறேன்” என்று சொல்வது போன்ற வசனம் ஒன்று இடம் பெற்றிருக்கும். அதாவது நடிகர் விஜய் அரசியலுக்கு செல்கிறார். அதனால் சினிமாவை சிவகார்த்திகேயன், தான் பார்த்துக் கொள்வதாக சொல்கிறார் என ரசிகர்கள் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வரும் கோட் படம், முதல் நாளில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 45 கோடி வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- Advertisement -