STR 49 படத்தில் நடிகர் சந்தானம் ஓகே சொன்னதற்கான காரணம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக ரசிகர்களால் அறியப்பட்டவர். இந்த வகையில் இவருடைய டைமிங் காமெடி பலரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். அதாவது கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் ஆகியோருக்கு பிறகு காமெடி என்றால் அது சந்தானம் தான். இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோவின் நண்பனாக நடித்தாலும் ஹீரோவையே கலாய்க்கும் விதம் வேற ரகம். இப்படி நகைச்சுவை நடிகராக கோலாட்சி செய்த சந்தானம் தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அவர் ஹீரோவாக நடிக்கும் படங்களிலும் காமெடிகள் இருக்கும். இருப்பினும் பலரும் அவரை காமெடியனாக மிஸ் செய்கின்றனர். இந்த நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் மதகஜராஜா திரைப்படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இதை பார்த்த பலரும் நடிகர் சந்தானம் மீண்டும் காமெடியனாக நடிக்க வேண்டும் என விரும்பினர். அதன்படி ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் STR 49 படத்தில் காமெடியனாக நடிக்க ஒப்புக்கொண்டு உள்ளாராம் சந்தானம். இதற்காக அவர் அட்வான்ஸ் வாங்கி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. மீண்டும் – சிம்பு சந்தானம் காம்போவை பார்க்க ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கும் சந்தானம் எப்படி காமெடியனாக நடிக்க ஒப்புக்கொண்டார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதன்படி தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், STR 49 படத்தில் சந்தானம் காமெடியனாக நடித்தாலும் இந்த படத்தில் அவருடைய கேரக்டரின் முடிவு சோகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஆதலால் STR 49 படம் ஒரு டபுள் ஹீரோ சப்ஜெக்டாக இருக்கலாம் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது தவிர நடிகர் சந்தானம் பாஸ் என்கிற பாஸ்கரன் 2 திரைப்படத்திலும் நடிக்க உள்ளாராம். அதுவும் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் ஆக தான் உருவாக இருக்கிறதாம். மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.