Homeசெய்திகள்சினிமாஜீவா நடிக்கும் 'பிளாக்' படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?

ஜீவா நடிக்கும் ‘பிளாக்’ படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?

-

ஜீவா நடிக்கும் பிளாக் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.ஜீவா நடிக்கும் 'பிளாக்' படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?

பிரபல தயாரிப்பாளர் ஆர் பி சௌத்ரியின் மகனான நடிகர் ஜீவா, ராம், ஈ , கற்றது தமிழ் என பல வித்தியாசமான கதைக்களத்தில் நடித்த ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். கடைசியாக இவர் யாத்ரா 2 எனும் அரசியல் சம்பந்தமான திரைப்படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக இவரது நடிப்பில் பிளாக் எனும் திரைப்படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் கே ஜி பாலசுப்ரமணி இயக்கி இருக்கிறார். இதில் ஜீவாவுடன் இணைந்து பிரியா பவானி சங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். திரில்லர் கதை களத்தில் உருவாகி இருக்கும் இந்த படம் ஒரே இரவில் நடக்கும் கதையாகும். இதனை பொடன்சியஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் நிலையில் ஷாம் சி எஸ் இதற்கு இசையமைத்திருக்கிறார். ஜீவா நடிக்கும் 'பிளாக்' படத்தின் ரிலீஸ் தேதி இதுதானா?கோகுல் பினாய் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ள நிலையில் பிலோமின் ராஜ் படத்தொகுப்பு பணிகளை கையாண்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்த நிலையில் படமானது 2024 செப்டம்பர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த படமானது அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகும் என்று புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. மேலும் இது தொடர்பான அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ