தனுஷ், வெற்றிமாறன் இணையும் புதிய படம் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ், ராயன் படத்திற்கு பிறகு குபேரா போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் தற்போது இட்லி கடை எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகின்ற ஏப்ரல் 10 அன்று திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இந்நிலையில் நடிகர் தனுஷ், வெற்றிமாறன் இயக்கத்தில் மீண்டும் ஒரு புதிய படத்தில் நடிக்கப் போகிறார் என ஆர் எஸ் இன்ஃபோடைன்மெண்ட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே தனுஷ், வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை, அசுரன் ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. எனவே அடுத்தபடியாக தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கதை குறித்த புதிய தகவல்களை இருக்கிறது. அதாவது இயக்குனர் வெற்றிமாறன், தனுஷை வைத்து இயக்கப் போகும் புதிய படமானது கோலார் தங்க வயல் சம்பந்தமான கதைக்களம் என்று தெரியவந்துள்ளது. இதனை பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
#Dhanush – #VetriMaaran
Story based on KGF 🥵
Going to be an epic film for Kollywood 🎯pic.twitter.com/pEXHYlmv3x— AmuthaBharathi (@CinemaWithAB) January 13, 2025
கடந்த ஆண்டில் விக்ரம் நடிப்பில் வெளியான தங்கலான் திரைப்படமும் கோலார் தங்க வயலில் தங்கம் எப்படி கண்டறியப்படுகிறது என்பதன் அடிப்படையில்தான் உருவாக்கப்பட்டிருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. எனவே வெற்றிமாறன் KGF ஐ அடிப்படையாகக் கொண்டு எடுக்கப் போகும் படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.