Homeசெய்திகள்சினிமாஜெயிலர் இரண்டாம் பாகத்தின் டைட்டில் இதுவா?

ஜெயிலர் இரண்டாம் பாகத்தின் டைட்டில் இதுவா?

-

ஜெயிலர் இரண்டாம் பாகத்தின் டைட்டில் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.ஜெயிலர் இரண்டாம் பாகத்தின் டைட்டில் இதுவா?

கடந்தாண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி ரஜினி நடிப்பில் வெளியான திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலிப் குமார் இயக்கியிருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். இதில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடித்த மகனாக வசந்த் ரவி நடித்திருந்தார். படத்தில் வில்லனாக விநாயகன் நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று வசூல் ரீதியாகவும் வரலாற்று சாதனை படைத்தது.ஜெயிலர் இரண்டாம் பாகத்தின் டைட்டில் இதுவா? அனிருத்தின் இசையும் இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்தது. இந்த படத்தின் இமாலய வெற்றிக்குப் பிறகு ஜெயிலர் இரண்டாம் பாகத்தை நெல்சன் இயக்க உள்ளார். இதற்காக நெல்சன் மற்றும் ரஜினி ஆகியோர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கலாநிதி மாறனிடம் அட்வான்ஸ் தொகையை ஏற்கனவே பெற்றுவிட்டதாக சொல்லப்படுகிறது. ஜெயிலர் இரண்டாம் பாகத்தின் டைட்டில் இதுவா?ஆகவே அடுத்தபடியாக ஜெயிலர் 2 படத்தின் முதற்கட்ட வேலைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் ஜெயிலர் இரண்டாம் பாகத்திற்கு ஹுக்கும் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜெயிலர் படத்தில் இடம்பெற்றிருந்த ஹுக்கும் பாடல் செம மாஸாக இருந்ததால் இணையத்தில் ட்ரெண்டாகி வந்தது.ஜெயிலர் இரண்டாம் பாகத்தின் டைட்டில் இதுவா?

மேலும் நடிகர் ரஜினி தற்போது வேட்டையன் திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அடுத்ததாக தலைவர் 171 படத்தில் நடிக்க உள்ளார். தலைவர் 171 படத்திற்கு பிறகு ஜெயிலர் 2 படத்தில் நடிப்பார் என்று நம்பப்படுகிறது.

MUST READ