பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான நடிகர்களில் ஒருவராவார். இவர் தமிழ் மொழியில் மட்டுமல்லாமல் மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே இவர், மலையாளத்தில் 19 (1)(a) எனும் திரைப்படத்திலும் இந்தியில் ஜவான் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் தமிழில் காந்தி டாக்ஸ், ஏஸ், ட்ரெயின் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடித்து முடித்துள்ளார். இன்னும் சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார் விஜய் சேதுபதி. இந்நிலையில் தான் சமீபத்தில் விஜய் சேதுபதி, பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு பெக்கர் என்ற தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.