கேம் சேஞ்சர் தெலுங்கில் ஜனவரி 10 ஆம் தேதி ரிலீஸுக்கு தயாராகிறது. ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் கதையை விஜயிடம்தான் சொல்லி இருக்கிறார் இயக்குநர் ஷங்கர். ஏனோ சில காரணங்களால் விஜய் அந்தப் படத்தில் நடிக்கமுடியவில்லை. விஜயின் பதிலுக்காக காத்திருந்த ஷங்கர் வெறுத்துப்போய்தான் ராம் சரணை அணுகியுள்ளார்.
2019 ல், ஷங்கர் விஜயயை வைத்து படம் இயக்கும் திட்டத்தில் இருந்தார். அந்தப்படம் தான் கேம் சேஞ்சர் என்று எல்லோரும் நினைக்கிறார்கள். கேம் சேஞ்சர் கதை இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் எழுதியது. அதற்கு ஷங்கர் திரைக்கதையை வடிவமைத்தார்.
ஷங்கரும், அவரது உதவி இயக்குநர்களும் படப்பிடிப்பைத் தொடங்குவதற்கு முன்பு ஸ்கிரிப்டில் பரபரவென வேலை செய்தனர். நேற்று வெளியான ட்ரெய்லர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கியாரா அத்வானி கதாநாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடிக்கின்றனர்.
தில் ராஜு தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 10, 2025 அன்று திரைக்கு வருகிறது.