லியோ படத்தில் மற்றுமொரு மற்றுமொரு யூடியூப் பிரபலம் இணைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘லியோ‘ படத்தில் விஜய், திரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், மிஸ்கின் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
ஒரு மாஸ் கேங்ஸ்டர் படமான இப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி திரையில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது இப்படத்தில் மற்றுமொரு யூடியூபர் இணைந்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில் பிரபல தமிழ் கிரிக்கெட் வர்ணனையாளர் பிரதீப் முத்து லியோ படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. தனது ட்விட்டர் பயோவில் தான் நடித்த படங்களின் பட்டியலில் மீசைய முறுக்கு, வீட்ல விசேஷம் ஆகிய படங்களை அடுத்து லியோ படத்தையும் இணைந்துள்ளார். எனவே அவர் லியோ படத்தில் நடித்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் தன்னுடைய நகைச்சுவையான கமெண்ட்களை கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளார். மேலும் Why blood same blood என்ற யூடியூப் சேனலில் இவர் படங்களை கலாய்ப்பதற்கு தனி ரசிகர் படை உள்ளனர்.
சில மாதங்களுக்கு முன் லோகேஷ் கனகராஜ் இயக்கி கமலின் நடிப்பில் வெளிவந்த ‘விக்ரம்’ திரைப்படத்தில் SIMPLE DHAA என்ற யூடியூப் சேனலை நடத்தி வந்த அருணோதையன் என்பவரை சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருந்தார். அதுபோல தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்திலும் யூடியூபரான பிரதீப் முத்துவிற்கு நடிக்கும் வாய்ப்பை கொடுத்திருக்கிறார். இவ்வாறாக வளர்ந்து வரும் இளைஞர்களுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுக்கும் வாய்ப்புகள் சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் அது ஊக்குவிக்கும் விதமாக இருக்கிறது என்று பலர் தன் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.