Homeசெய்திகள்சினிமா'புஷ்பா' பட இயக்குனர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

‘புஷ்பா’ பட இயக்குனர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

-

- Advertisement -

புஷ்பா பட இயக்குனர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.'புஷ்பா' பட இயக்குனர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!

தெலுங்கு சினிமாவில் முக்கியமான இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் சுகுமார். இவர் ஆர்யா, ரங்கஸ்தலம் என பல வெற்றி படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அடுத்தது இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் இந்திய அளவில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. அதன் பிறகு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அல்லு அர்ஜுன், சுகுமார் கூட்டணியில் புஷ்பா 2 திரைப்படம் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. 'புஷ்பா' பட இயக்குனர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை!அதன்படி இப்படம் உலக அளவில் சுமார் ரூ. 1800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய சாதனை படைத்தது. இந்நிலையில் சமீபத்தில் புஷ்பா படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தினர். அதைத்தொடர்ந்து புஷ்பா படத்தின் இயக்குனர் சுகுமார் வீட்டிலும் அவருடைய அலுவலகத்திலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து இயக்குனர் சுகுமாரை அழைத்து வந்து விசாரணை நடத்தி வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ