நடிகர் விஜயகாந்த் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 20 நாட்கள் வரை சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி வீடு திரும்பினார். இந்நிலையில் நேற்றைய முன் தினம் மீண்டும் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வென்டிலே சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தேமுதிக நிர்வாகத்தின் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
ஆனால் இன்று விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. விஜயகாந்தின் மறைவிற்கு அதிமுக கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் தியாகராஜன் விஜயகாந்தின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். சங்கம் கடனிலிருந்து சமயத்தில் நடிகர்களை வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்தி அதன் மூலம் வந்த வசூலை லாபகரமானதாக மாற்றி நடிகர் சங்கத்தை பெரும் கடனிலிருந்து மீட்டவர் விஜயகாந்த் என்று விஜயகாந்தின் பெருமையை பற்றி பேசி இருக்கிறார்.
தியாகராஜன் விஜயகாந்த் உடன் இணைந்து நல்ல நாள் போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.