Homeசெய்திகள்சினிமாமுதல் பாகத்தை விட இது டபுள் மடங்கு இருக்கும்..... 'டிடி ரிட்டன்ஸ் 2' குறித்த லேட்டஸ்ட்...

முதல் பாகத்தை விட இது டபுள் மடங்கு இருக்கும்….. ‘டிடி ரிட்டன்ஸ் 2’ குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

நடிகர் சந்தானம் தமிழ் சினிமாவில் விஜய், அஜித் , தனுஷ் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். முதல் பாகத்தை விட இது டபுள் மடங்கு இருக்கும்..... 'டிடி ரிட்டன்ஸ் 2' குறித்த லேட்டஸ்ட் அப்டேட்!அடுத்தது இவர் ஹீரோவாக களமிறங்கி தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர்கள் நடிப்பில் கடைசியாக இங்க நான் தான் கிங்கு எனும் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது சந்தானம் நடிப்பில் டிடி ரிட்டன்ஸ் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. அதாவது கடந்த ஆண்டு டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏதோபித்த வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்த படத்தினை பிரேம் ஆனந்த் இயக்கியிருந்த நிலையில் தற்போது இதன் இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது. அதன்படி டிடி ரிட்டன்ஸ் 2 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தினை நடிகர் ஆர்யா தயாரிக்கிறார். அத்துடன் இந்த படத்தில் நடிகர் ஆர்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வருகிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும் படத்தில் மீனாட்சி சௌத்ரி, நிழல்கள் ரவி, லொள்ளு சபா மாறன், ரெடின் கிங்ஸ்லி, உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.முதல் பாகத்தை விட இது டபுள் மடங்கு இருக்கும்..... 'டிடி ரிட்டன்ஸ் 2' குறித்த லேட்டஸ்ட் அப்டேட்! கடந்த சில மாதங்களுக்கு முன்பாக இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு பாண்டிச்சேரி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து சில அப்டேட்டுகள் வெளிவந்துள்ளன. அதாவது டிடி ரிட்டன்ஸ் திரைப்படத்தை விட டிடி ரிட்டர்ன்ஸ் 2 படத்தில் டபுள் மடங்கு காமெடி இருக்கும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தது இந்த மாதம் கடைசி வரை பாண்டிச்சேரியில் படப்பிடிப்பை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

MUST READ