Homeசெய்திகள்சினிமாஇது சிறந்த படங்களில் ஒன்று..... 'சப்தம்' படம் குறித்து நடிகர் நானி!

இது சிறந்த படங்களில் ஒன்று….. ‘சப்தம்’ படம் குறித்து நடிகர் நானி!

-

- Advertisement -

நடிகர் நானி, சப்தம் படம் குறித்து பேசியுள்ளார்.இது சிறந்த படங்களில் ஒன்று..... 'சப்தம்' படம் குறித்து நடிகர் நானி!

ஆதி நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஈரம் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை அறிவழகன் இயக்கி இருந்தார். இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைந்து சப்தம் எனும் திரைப்படத்தை உருவாக்கியுள்ளது. ஈரம் படத்தைப் போலவே ஹாரர் திரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. 7 ஜி ஃபிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இது சிறந்த படங்களில் ஒன்று..... 'சப்தம்' படம் குறித்து நடிகர் நானி!இப்படத்தில் ஆதியுடன் இணைந்து லட்சுமிமேனன், லைலா, சிம்ரன், ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இப்படமானது வருகின்ற பிப்ரவரி 28ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்தப் படத்திலிருந்து ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு ப்ரீ ரிலீஸ் விழாவில் நடிகர் நானி கலந்து கொண்டு பேசியபோது, “சப்தம் படம் தொழில்நுட்ப ரீதியாக மிகவும் சிறந்த திரைப்படங்களில் ஒன்று. இது சிறந்த படங்களில் ஒன்று..... 'சப்தம்' படம் குறித்து நடிகர் நானி!இந்த படம் சிறந்த ஹாரர் படங்களில் நம்மை உணர்வுபூர்வமாக இணைக்கும். இந்தப் படத்தை கண்டிப்பாக திரையரங்குகளில் பார்க்க வேண்டும். ஒவ்வொரு காட்சியும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதிலும் கண்ணாடிக்குள் சர்க்கரை விழும் சத்தமும் ஆழமான திகில் காட்சிகளில் ஒன்றாக இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ