Homeசெய்திகள்சினிமாஇயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரின் நினைவு தினம் இன்று!

இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரின் நினைவு தினம் இன்று!

-

- Advertisement -

இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரின் 10ஆம் ஆண்டு நினைவு தினம் இன்றுஇயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரின் நினைவு தினம் இன்று!ஒவ்வொரு துறையிலும் சாதித்தவர்களை ‘சிகரம் தொட்டவர்கள்’ என்று பொதுவாக குறிப்பிடுவதுண்டு. ஆனால் சினிமா துறையில் சாதித்து சிகரம் என்பதே அடைமொழியாய் பெற்றவர்தான் ‘இயக்குனர் சிகரம்’ கே. பாலசந்தர். தஞ்சாவூரை பூர்வீகமாகக் கொண்ட இவர் 1930 இல் பிறந்தார். சினிமாவிற்கு வருவதற்கு முன்பு பல நாடகங்களில் பணியாற்றினார். 1964 எம் ஜி ஆர் நடிப்பில் வெளியான தெய்வத்தாய் என்னும் திரைப்படத்தில் வசன எழுத்தாளராக தமிழ் சினிமாவில் முதல் அடியை எடுத்து வைத்தார். இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரின் நினைவு தினம் இன்று!பின்னர் அதைத் தொடர்ந்து 1965 ஆம் ஆண்டு நடிகர் நாகேஷ் நடிப்பில் வெளியான ‘நீர்க்குமிழி’ படத்தின் மூலம் தன்னை இயக்குனராக நிரூபித்துக் கொண்டார். சிக்கலான கதையாக இருந்தாலும் அதை நேர்த்தியாக சொல்லும் விதத்தில் இவருடைய பேனாக்கள் பெரும் பங்காற்றின. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பார்வையாளர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துவது போன்று வடிவமைப்பது இவருடைய தனிச்சிறப்பு. இன்றளவும் பல இளைஞர்களுக்கும் முன்னணி நடிகர்களுக்கும் இவர்தான் குரு என்பதை யாராலும் மறுக்க முடியாது. சமூகத்தில் அழுத்தமாக சொல்லப்பட வேண்டிய கதைகளை புதுமுக நடிகர்களை வைத்து இவர் மிகச்சிறப்பாக கையாண்டவர். இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரின் நினைவு தினம் இன்று!சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அபூர்வராகங்கள் படத்தின் மூலமும் கமல்ஹாசனை அரங்கேற்றம் படத்தின் மூலமும் கதாநாயகனாக அறிமுகம் செய்து வைத்தவரும் இவரே. இந்த இரு பெரும் ஜாம்பவான்களும் இன்றளவும் எந்த ஒரு மேடையையும் இவர் பெயர் இல்லாது கடந்து சென்றது இல்லை. மேலும் பல குணச்சித்திர நடிகர்களையும் அறிமுகம் செய்து வைத்தவர் கே . பாலச்சந்தர் தான். இன்றளவும் இசையில் ஓயாத இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான், மணிரத்னம் இயக்கத்தில் கே. பாலச்சந்தரின் கவிதாலயா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வெளிவந்த ரோஜா படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். கே பாலச்சந்தரின் கதைகளைப் போலவே அவருடைய படத்தின் பாடல்களும் மீண்டும் மீண்டும் நம்மை அறியாமல் முணுமுணுக்க வைக்கும். இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரின் நினைவு தினம் இன்று!குறிப்பாக வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் இடம்பெற்ற ‘சிப்பி இருக்குது முத்தும் இருக்குது’ பாடல் என்றுமே ஒரு தனித்துவமிக்க பாடலாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. அந்த வகையில் திரைக்கதையை போலவே பாடலிலும் புதுமையையும் கவிதையையும் இனிமையாக விருந்தளிப்பவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 100 திரைப்படங்களை இயக்கிய இவர் 9 முறை தேசிய விருதையும் 13 முறை ஃபிலிம் ஃபேர் விருதையும் வென்றுள்ளார். மேலும் பத்மஸ்ரீ, தாதா சாகிப் பால்கே விருது போன்றவற்றையும் வென்றுள்ளார். இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தரின் நினைவு தினம் இன்று!இவர் இயக்குனராக மட்டுமின்றி பல திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார். கமலஹாசனின் உத்தம வில்லன் திரைப்படம் தான் இவர் கடைசியாக நடித்த திரைப்படம். இத்தகைய மாபெரும் கலைஞன் டிசம்பர் 23, 2014-ல் மறைந்தார். மண்ணை விட்டு மறைந்தாலும் தன் படைப்புகள் மூலம் மக்களின் மனதில் என்றும் சிகரமாய் நிற்கிறார் கே. பாலச்சந்தர்.

MUST READ