ஹாலிவுட்டில் புகழ்பெற்ற உச்ச நட்சத்திரம் வில் ஸ்மித். இவரது மனைவி ஜடா பிங்கெட். கடந்த வருடம் நடைபெற்ற ஆஸ்கர் விருது விழாவில், தனது மனைவி ஜடாவை கேலி செய்த தொகுப்பாளர் கிறிஸ் ராக்கை, வில் ஸ்மித் கன்னத்தில் அறைந்தார். அச்சம்பவம் தொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், அவர் மீது துறை ரீதியாகவும் நடவடிக்கை பாய்ந்தது. இதைத் தொடர்ந்து, அவர் பொது நிகழ்ச்சிகள் மற்றும் விருது விழாக்களில் பங்கேற்கவில்லை.