Homeசெய்திகள்சினிமாஜெய்பீம் மணிகண்டன் நடிக்கும் 'லவ்வர்'..... டீசர் குறித்த அறிவிப்பு!

ஜெய்பீம் மணிகண்டன் நடிக்கும் ‘லவ்வர்’….. டீசர் குறித்த அறிவிப்பு!

-

ஜெய்பீம் மணிகண்டன் நடிக்கும் "லவ்வர்"..... டீசர் குறித்த அறிவிப்பு!காதலும் கடந்து போகும், ஜெய் பீம் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் மணிகண்டன். குறிப்பாக ஜெய் பீம் படத்தில் இவருடைய நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதைத்தொடர்ந்து குட் நைட் என்னும் ஃபீல் குட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைப் பெற்று 2023 ஆம் ஆண்டின் சிறந்த படங்களின் வரிசையில் இடம் பெற்றுள்ளது. எனவே அடுத்ததாக மணிகண்டன் நடிக்கும் படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருந்து வருகின்றன. இந்நிலையில் அடுத்ததாக, மணிகண்டன் “லவ்வர்” எனும் படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் நாயகியாக கௌரி பிரியா நடித்துள்ளார். மேலும் கண்ணன் ரவி, ஹரிஷ் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பிரபு ராம் வியாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.2024 காதலர் தினத்தன்று இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஜெய்பீம் மணிகண்டன் நடிக்கும் "லவ்வர்".. டீசர் குறித்த அறிவிப்பு!இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. இதனை ஒரு போஸ்டர் மூலம் அறிவித்துள்ளனர் படக் குழுவினர். படத்தின் போஸ்டர்களில் இருந்து இப்படமும் எமோஷனலான காதல் திரைப்படமாக இருக்கும் எனத் தெரிகிறது. மேலும் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ