Homeசெய்திகள்சினிமாஇயக்குனராக அவதாரம் எடுக்கும் ஜெய்பீம் மணிகண்டன்..... ஹீரோ யார் தெரியுமா?

இயக்குனராக அவதாரம் எடுக்கும் ஜெய்பீம் மணிகண்டன்….. ஹீரோ யார் தெரியுமா?

-

- Advertisement -

இயக்குனராக அவதாரம் எடுக்கும் ஜெய்பீம் மணிகண்டன்..... ஹீரோ யார் தெரியுமா?!டிஜே ஞானவேல் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜெய் பீம் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் சூர்யா, மணிகண்டன், பிரகாஷ்ராஜ், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் நடிகர் மணிகண்டன் ராசா கண்ணு என்னும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதே சமயம் மணிகண்டனுக்கு ஜெய் பீம் திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாகவும் அமைந்தது. அதைத்தொடர்ந்து மணிகண்டன் தற்போது ஹீரோவாக பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் குட் நைட் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். குறட்டை என்ற கான்செப்ட்டை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அடுத்ததாக ஜெய் பீம் மணிகண்டன் நடிப்பில் லவ்வர் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகின்ற பிப்ரவரி 9ஆம் தேதி வெளியாக இருக்கிறது.இயக்குனராக அவதாரம் எடுக்கும் ஜெய்பீம் மணிகண்டன்..... ஹீரோ யார் தெரியுமா? சமீபத்தில் வெளியான டிரைலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. மேலும் லவ்வர் திரைப்படத்தை பார்த்த பிரபலங்கள் பலரும் இப்படம் 2024 ஆம் ஆண்டின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் என்று தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் மணிகண்டனுக்கு பல பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதன்படி பல துணை இயக்குனர்கள் மணிகண்டனுக்காகவே ஸ்கிரிப்டுகளையும் எழுதி மணிகண்டனிடம் கால்ஷீட் கேட்பதற்காக வரிசையில் நிற்கின்றனராம். ஆனால் மணிகண்டன் இரண்டு வருடங்களுக்கு கால அவகாசம் கேட்டு பட வாய்ப்புகளை தட்டி கழித்து வருகிறாராம்.இயக்குனராக அவதாரம் எடுக்கும் ஜெய்பீம் மணிகண்டன்..... ஹீரோ யார் தெரியுமா? இதற்கு காரணம் என்னவென்றால் நடிகர் மணிகண்டன் இயக்குனராக அவதாரம் எடுக்க இருக்கிறாராம். அதாவது மணிகண்டன், விஜய் சேதுபதி நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாகவும் அதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ