Homeசெய்திகள்சினிமாஜெய் பீம் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள 'லவ்வர்'..... முதல் விமர்சனம் இதோ!

ஜெய் பீம் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லவ்வர்’….. முதல் விமர்சனம் இதோ!

-

ஜெய் பீம் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள 'லவ்வர்'..... முதல் விமர்சனம் இதோ!டிஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியான ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் மணிகண்டன். இதில் இவர் ஏற்று நடித்திருந்த ராசா கண்ணு என்னும் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று மணிகண்டனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. அதன்படி அடுத்ததாக மணிகண்டன் நடிப்பில் வெளியான குட் நைட் திரைப்படமும் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் வெளியான குட் நைட் படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதைத் தொடர்ந்து மணிகண்டனின் அடுத்த படம் குறித்த எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில்
மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள லவ்வர் திரைப்படம் வருகின்ற பிப்ரவரி 9ம் தேதி வெளியாக இருக்கிறது. ஜெய் பீம் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள 'லவ்வர்'..... முதல் விமர்சனம் இதோ!மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை பிரபு ராம் வியாஸ் இயக்கியுள்ளார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். காதல் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பாக வெளியான நிலையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்களை பட குழுவினர் வெளியிட்டு கவனம் ஈர்க்கின்றனர்.

இந்நிலையில் லவ்வர் படத்தை பார்த்த விநியோகஸ்தர் ஒருவர் படத்தின் முதல் விமர்சனத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். “கடந்த ஆண்டின் சூப்பர் ஹிட் படமான குட் நைட் பட தயாரிப்பாளர்களின் லவ்வர் படத்தை பார்த்தேன். அவ்வளவு அழகான காதல் படம். இன்றைய இளைஞர்களை தொடர்பு படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இளம் பார்வையாளர்களை இப்படம் திரையரங்குகளுக்கு இழுக்கும். மணிகண்டன் இப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் அசாதாரணமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். குரல் பண்பேற்றமும் இன்னும் பெரியதாக இருக்கிறது. ஷான் ரோல்டனின் இசை ஆத்மார்த்தமாக உள்ளது. என் வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளுங்கள் லவ்வர் திரைப்படம் நிச்சயமாக 2024 ஆம் ஆண்டின் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் படமாக அமையும்” என்று அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக அதிகமாகியுள்ளது.

MUST READ