Homeசெய்திகள்சினிமாநம்ம 'ராஜா ராணி' ஜோடி மறுபடி ஒண்ணா வரப்போறாங்க🤩... உற்சாகமான ரசிகர்கள்!

நம்ம ‘ராஜா ராணி’ ஜோடி மறுபடி ஒண்ணா வரப்போறாங்க🤩… உற்சாகமான ரசிகர்கள்!

-

‘ராஜா ராணி’ படத்தை அடுத்து மீண்டும் அந்த சூப்பர் ஹிட் இணையப் போறாங்களாம்ப்பா!

ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன்பு, ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் நயன்தாரா நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தை அறிவித்தனர். அறிமுக இயக்குனர் நீலேஷ் கிருஷ்ணா இந்தப் படத்தை இயக்குகிறார். படத்திற்கு ‘லேடி சூப்பர் ஸ்டார் 75’ என்று தற்காலிகமாக தலைப்பு வைத்தனர். இப்படத்தை ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் மற்றும் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.

jai

இந்த வருடத்தில் படம் குறித்த வேறு எந்த அப்டேட்-ம் வெளியாகாமல் இருந்த நிலையில் தற்போது முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஜெய் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். இன்று ஜெய் தனது பிறந்தநாள் கொண்டாடப்படுவதையொட்டி இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Jai

ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ராஜா ராணிக்குப் பிறகு நயன்தாரா மற்றும் ஜெய் கூட்டணி மீண்டும் ஜோடி சேருகிறது என்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் நயன்தாரா ‘இறைவன்’ படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ‘ஜவான்’ படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

MUST READ