நடிகர் ஜெய் விஜய்க்கு தம்பியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது.
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்த படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது.
இதைத்தொடர்ந்து விஜய் தனது 68 வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது.
அதன்படி இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் தளபதி 68 படமானது அரசியல் கதைகளத்தில் உருவாக இருப்பதாகவும் படத்திற்கு CSK என்று தலைப்பு வைக்க வாய்ப்புள்ளதாகவும் பல செய்திகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் நடிகைகள் குறித்த தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனாலும் தமன்னா, பிரியா பவானி சங்கர், கீர்த்தி செட்டி உள்ளிட்டோரின் பெயர்கள் கதாநாயகி கதாபாத்திரத்தில் இருப்பதற்கான வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் விஜய்க்கு எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமில்லாமல் நடிகர் ஜெய் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று தகவல்கள் கசிந்து இருந்தன. ஏற்கனவே 2002 ஆம் ஆண்டு வெளியான பகவதி திரைப்படத்தில் விஜய் உடன் இணைந்து ஜெய் நடித்திருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. அத்துடன் அந்த படத்தில் ஜெய் விஜய்க்கு தம்பியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக தளபதி 68 ஜெய், விஜய்க்கு தம்பியாக நடிக்கவுள்ளார் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பும் படத்தின் படப்பிடிப்பு சம்பந்தமான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.