ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா, விருத்தா விஷால் உள்ளிட்டோருக்கு நடிப்பில் ரோஹின் வெங்கடேஷ் இயக்கத்தில் ,தீராக் காதல்‘ என்னும் திரைப்படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிடுகின்றனர். இப்படத்திற்கு சித்து குமார் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் வரும் மே 26 ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஜெய், ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டனர்.
அதில் பேசிய ஜெய், “இந்த படத்தின் கதையை கேட்கும் போது இந்த படம் எனக்கு பொருத்தமானதாக இருக்குமா என்று சந்தேகம் இருந்தது. இயக்குனர் ரோஹின் மீது எனக்கு மிகப்பெரிய நம்பிக்கை இருந்தது அவர் இயக்கிய அதே கண்கள் படத்தை நான்கு முறை பார்த்தேன். அதன் பிறகு அவரது இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசைப்பட்டேன். அந்த ஆசை இந்த படத்தின் மூலம் நிறைவேறி உள்ளது. இந்த படத்தில் இரண்டு நடிகைகளும் சிறப்பாக நடித்துள்ளனர். இந்த படத்தில் பாடலும் இசையும் சிறப்பாக அமைந்துள்ளது. மேலும் என்னுடன் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நன்றி. லைக்கா நிறுவனத்தின் தமிழுக்கு குமரனுக்கு நன்றி பட குழுவினர் அனைவருக்கும் நன்றி” என்று பேசியுள்ளார்.