Homeசெய்திகள்சினிமாவிரைவில் 'ஜெயிலர் 2' அறிவிப்பு?... நெல்சன் கொடுத்த சூப்பரான அப்டேட்!

விரைவில் ‘ஜெயிலர் 2’ அறிவிப்பு?… நெல்சன் கொடுத்த சூப்பரான அப்டேட்!

-

நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார்.விரைவில் 'ஜெயிலர் 2' அறிவிப்பு?... நெல்சன் கொடுத்த சூப்பரான அப்டேட்! இவர் தனது முதல் படத்திலிருந்து வெற்றி பெற்று அடுத்ததாக டாக்டர் திரைப்படத்தை இயக்கினார். இந்தப் படமும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்க நடிகர் விஜயை இயக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. ஒரு சில காரணங்களால் இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை என்றாலும் எப்படியாவது கம்பேக் கொடுத்து விட வேண்டும் என்ற முனைப்பில் ரஜினிகாந்திற்காக தரமான கதையை தயார் செய்து ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளை பெற்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் உருவாகி இருந்த இந்த படம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகி 600 கோடிக்கு மேல் வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது. விரைவில் 'ஜெயிலர் 2' அறிவிப்பு?... நெல்சன் கொடுத்த சூப்பரான அப்டேட்!அதைத்தொடர்ந்து ஜெயிலர் 2 திரைப்படத்தை நெல்சன் இயக்கப் போவதாக செய்திகள் பரவி வந்தது. அதேசமயம் ரசிகர்கள் மத்தியிலும் ஜெயலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இயக்குனர் நெல்சன் சமீபத்தில் நடந்த பேட்டியில், ” என்னுடைய அடுத்த ப்ராஜெக்ட்டின் ஸ்கிரிப்ட் வேலைகள் நடைபெற்று வருகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்” என்று கூறினார். அதைத்தொடர்ந்து நெல்சனிடம் ஜெயலர் 2 படம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. விரைவில் 'ஜெயிலர் 2' அறிவிப்பு?... நெல்சன் கொடுத்த சூப்பரான அப்டேட்!அதற்கு நெல்சன், “என்னுடைய அடுத்த ப்ராஜெக்ட் ஜெயிலர் 2 படமா இல்லையா என்பது எனக்கு தெரியவில்லை. அறிவிப்பிற்காக தான் நானும் காத்துக் கொண்டிருக்கிறேன். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகவும் உத்வேகம் அளிப்பவர். அடக்கமாகவும் இனிமையாகவும் இருப்பவர். அவர் நிறைய ஆறுதல் தருபவர்” என்று பதிலளித்துள்ளார்.

MUST READ