Homeசெய்திகள்சினிமா'ஜெயிலர் 2' படத்தில் நடிக்கும் கேமியோக்கள் யார் யார்?

‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்கும் கேமியோக்கள் யார் யார்?

-

- Advertisement -

ஜெயிலர் 2 படத்தில் நடிக்கும் கேமியோக்கள் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.'ஜெயிலர் 2' படத்தில் நடிக்கும் கேமியோக்கள் யார் யார்?

கடந்த 2023 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. நெல்சன் இயக்கியிருந்த இந்த படம் சுமார் ரூ. 600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. வழக்கம்போல் ரஜினியின் ஸ்டைலும் மாஸும் எப்படி இந்த படத்தை வெற்றி படமாக மாற்றியதோ அதேபோல் அனிருத்தின் இசையும், நெல்சனின் திரைக்கதையும் படத்திற்கு பெரும் பலம் சேர்த்தன. அதுமட்டுமில்லாமல் நடிகை தமன்னா நடனமாடி இருந்த காவாலா பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. மேலும் இந்த படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோரின் கேமியோக்கள் திரையரங்கை அதிரவைத்தன. 'ஜெயிலர் 2' படத்தில் நடிக்கும் கேமியோக்கள் யார் யார்?எனவே தற்போது நெல்சன், ரஜினி கூட்டணியில் உருவாகி வரும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் யார் யார் கேமியோ ரோலில் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி சமீப காலமாக ஜெயிலர் 2 படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கப் போவதாகவும் நந்தமுரி பாலகிருஷ்ணா கேமியோ ரோலில் நடிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. 'ஜெயிலர் 2' படத்தில் நடிக்கும் கேமியோக்கள் யார் யார்?அடுத்தது சல்மான் கான், சஞ்சய் தத் ஆகியோரையும் இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே நெல்சன் ஜெயிலர் படத்தின் மூலம் எப்படி ரசிகர்களுக்கு விருந்து படைத்தாரோ அதைவிட இரட்டிப்பு மடங்காக ஜெயிலர் 2 படத்தின் மூலம் ரசிகர்களுக்கு தீனி போடுவார் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இதற்கிடையில் சமீபத்தில் ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ