Homeசெய்திகள்சினிமாரஜினி பிறந்தநாளில் தரமான சம்பவம் இருக்கு..... 'ஜெயிலர் 2' பட அப்டேட்!

ரஜினி பிறந்தநாளில் தரமான சம்பவம் இருக்கு….. ‘ஜெயிலர் 2’ பட அப்டேட்!

-

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை நெல்சன் திலீப்குமார் இயக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் படத்தினை தயாரித்திருந்தது. ரஜினி பிறந்தநாளில் தரமான சம்பவம் இருக்கு..... 'ஜெயிலர் 2' பட அப்டேட்!அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகிய பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மோகன்லால், சிவராஜ் குமார், தமன்னா, ஜாக்கி ஷெராப் ஆகியோர் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இதைத் தொடர்ந்து இயக்குனர் நெல்சன், ஜெயிலர் 2 திரைப்படத்தினை இயக்க திட்டமிட்டு வருகிறார். அதன்படி அதற்கான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார் நெல்சன். இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தின் ப்ரோமோ படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி நடைபெற இருப்பதாகவும் அதற்கான ஏற்பாடுகள் ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வருவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. ரஜினி பிறந்தநாளில் தரமான சம்பவம் இருக்கு..... 'ஜெயிலர் 2' பட அப்டேட்!மேலும் ஜெயிலர் 2 படத்தின் இந்த ப்ரோமோ வீடியோவை வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்துள்ளது. அதே சமயம் ஜெயிலர் 2 படத்தில் யார் யார் நடிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.

MUST READ