Homeசெய்திகள்சினிமா2026க்கு தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2'.... நெல்சனின் பிளான் என்ன?

2026க்கு தள்ளிப்போகும் ‘ஜெயிலர் 2’…. நெல்சனின் பிளான் என்ன?

-

ஜெயிலர் 2 படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் எனும் திரைப்படம் வெளியானது. 2026க்கு தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2'.... நெல்சனின் பிளான் என்ன?இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க நெல்சன் திலீப் குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார். அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த வகையில் கிட்டத்தட்ட 600 கோடிக்கு மேல் வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது. இதை தொடர்ந்து நெல்சன் ஜெயிலர் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டு வருகிறார். அதன்படி வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வீடியோவுடன் வெளியாக இருக்கிறது. தற்போது இந்த ப்ரோமோ தொடர்பான படப்பிடிப்புகளும் நடைபெற்று வருகின்றன. மேலும் இயக்குனர் நெல்சன், ஜெயிலர் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரையும் ஜெயிலர் 2 திரைப்படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்து இருக்கிறாராம். அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக ஏற்கனவே தகவல் கசிந்தது. தமன்னா, விநாயகன் ஆகியோர் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க மாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும் இயக்குனர் நெல்சன், ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்க 13 மாதங்கள் நேரம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 2026க்கு தள்ளிப்போகும் 'ஜெயிலர் 2'.... நெல்சனின் பிளான் என்ன?அதாவது நடிகர் ரஜினிக்கு இரண்டாம் பாகத்தின் மீதான நம்பிக்கை வருவதற்காகவும் பல வேலைகளை செய்ய திட்டம் போட்டுள்ளாராம் நெல்சன். எனவே இந்த படமானது இன்னும் ஒரு வருடத்திற்கு தள்ளிப் போகும் என கூறப்படுகிறது. ஏற்கனவே ஜெயிலர் 2 படத்தை 2025 தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டிருந்த நிலையில் இப்போது படப்பிடிப்புகளை ஓராண்டுக்கு மேல் நடத்த திட்டம் போட்டிருப்பதால் ஜெயிலர் 2 திரைப்படமானது 2026 கோடை விடுமுறையில் வெளியாகும் என தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

MUST READ