Homeசெய்திகள்சினிமாபுத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகுமா 'ஜெயிலர் 2' படத்தின் ப்ரோமோ?

புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகுமா ‘ஜெயிலர் 2’ படத்தின் ப்ரோமோ?

-

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகுமா 'ஜெயிலர் 2' படத்தின் ப்ரோமோ?இந்த படத்தினை நெல்சன் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத்தின் இசையிலும் இந்த படம் உருவாகி இருந்தது. மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று மாபெரும் சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து இயக்குனர் நெல்சன், ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்க திட்டமிட்டு வருகிறார். அதன்படி நெல்சன், இந்த படம் தொடர்பான ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளையும் நிறைவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகுமா 'ஜெயிலர் 2' படத்தின் ப்ரோமோ?இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் விநாயகன், தமன்னா ஆகியோரை தவிர ஜெயிலர் முதல் பாகத்தில் நடித்த அனைவருமே ஜெயிலர் இரண்டாம் பாகத்திலும் நடிப்பார்கள் என்றும் இந்த படத்திற்கு ஹுக்கும் என்று தலைப்பு வைக்க வாய்ப்புள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதற்கிடையில் கடந்த டிசம்பர் 12ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வீடியோவுடன் வெளியாகும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஜெயிலர் 2 ப்ரோமோ படப்பிடிப்பு மழை போன்ற காரணங்களால் ரத்து செய்யப்பட்டதாகவும் கடந்த வாரம் ப்ரோமோ படப்பிடிப்பை நெல்சன் முடித்து விட்டதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியாகுமா 'ஜெயிலர் 2' படத்தின் ப்ரோமோ?எனவே ஜெயிலர் 2 ப்ரோமோ எப்போது வெளியாகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. தற்போது கிடைத்த தகவலின் படி புத்தாண்டு தின ஸ்பெஷலாக இந்த ப்ரோமோ வெளியிடப்படலாம் அல்லது பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது. இருப்பினும் ஜெயிலர் 2 ப்ரோமோவை கொண்டாட ரசிகர்கள் இப்பொழுதே தயாராகி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ