Homeசெய்திகள்சினிமா70 தமிழ் 30 தெலுங்கு ..... கலகலப்பான 'ஜெயிலர்' பட ஃபர்ஸ்ட் சிங்கிள் அனவுன்ஸ்மென்ட் ப்ரோமோ வெளியானது!

70 தமிழ் 30 தெலுங்கு ….. கலகலப்பான ‘ஜெயிலர்’ பட ஃபர்ஸ்ட் சிங்கிள் அனவுன்ஸ்மென்ட் ப்ரோமோ வெளியானது!

-

- Advertisement -

ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கள் அனவுன்ஸ்மென்ட் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

ரஜினிகாந்த்,நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் தமன்னா மோகன்லால் சிவராஜ்குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ள நிலையில் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மற்றும் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஜெயிலர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அன்னவுன்ஸ்மென்ட் வீடியோ இன்று வெளியாகும் என ஒரு ப்ரோமோ வீடியோவை வெளியிட்டு அறிவித்திருந்தது.

அதுபோல இன்று நெல்சனின் வழக்கமான பாணியில் ஃபர்ஸ்ட் சிங்கிள் அன்னவுன்ஸ்மென்ட் வீடியோ வெளியாகி உள்ளது. இந்த கலகலப்பான ப்ரோமோவில் வருகின்ற ஜூலை 6ஆம் தேதி ‘காவாலா’ எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் தமன்னா நடனமாடும் பாடலாக வெளிவரும் என தெரியவந்துள்ளது.

MUST READ