Homeசெய்திகள்சினிமாநெல்சன் திலீப்குமார்- ரஜினி காம்போவின் ‘ஜெயிலர்’ ரிலீஸ் தேதி அப்டேட்!

நெல்சன் திலீப்குமார்- ரஜினி காம்போவின் ‘ஜெயிலர்’ ரிலீஸ் தேதி அப்டேட்!

-

கோலமாவு கோகிலா பீஸ்ட்’ டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், சஞ்சய் தத் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ரஜினிகாந்த் இந்த படத்தில், முத்துவேல் பாண்டியன் என்னும் ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. .

இந்தப் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் இத்திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்று படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தின் முதல் பாடல் ஜூன் மாதத்தின் 2வது வாரத்தில் வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

MUST READ