Homeசெய்திகள்சினிமாஜெயிலர் பட வில்லனின் அடுத்த படம்..... டைட்டில் இதுதான்!

ஜெயிலர் பட வில்லனின் அடுத்த படம்….. டைட்டில் இதுதான்!

-

- Advertisement -

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 10ஆம் தேதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை நெல்சன் இயக்கியிருந்தார். அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்தப் படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து வரலாற்று சாதனை படைத்தது. இந்த படத்திற்கு அனிருத் இசை பெரிய அளவில் பலம் கொடுத்தது. ஜெயிலர் பட வில்லனின் அடுத்த படம்..... டைட்டில் இதுதான்!அதேசமயம் இதில் வில்லனாக நடித்திருந்த விநாயகன் கதாபாத்திரம் இன்று வரையிலும் பேசப்படுகிறது. மலையாளம் கலந்த தமிழில் இவர் பேசும் வசனங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

மலையாள நடிகரான விநாயகன், மலையாளத்தில் பல படங்களில் நடித்து தனது சிறந்த நடிப்பிற்காக பல விருதுகளை அள்ளி இருக்கிறார். இவர் தமிழிலும் திமிரு, காளை போன்ற படங்களில் நடித்துள்ள நிலையில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் விநாயகன். இந்நிலையில் இவர் அடுத்ததாக மலையாளத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இந்த படத்தில் விநாயகனுடன் இணைந்து சுராஜ் வெஞ்சரமூடு நடிக்கிறார். இந்த படத்தை பிரேம் சங்கர் இயக்க அஞ்சனா டாக்கீஸ் நிறுவனம் மற்றும் வார்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரிக்கிறது. மேலும் சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

எஸ் ஹரிஷ் கதை எழுதியுள்ள நிலையில் சுரேஷ் ராஜன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்திற்கு தெக்கு வடக்கு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழுவினர் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதில் விநாயகன் ஓய்வு பெற்ற மின் பொறியாளராக நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ