Homeசெய்திகள்சினிமாஇளையராஜாவின் இசையில் 'ஜமா' பட முதல் பாடல் வெளியானது!

இளையராஜாவின் இசையில் ‘ஜமா’ பட முதல் பாடல் வெளியானது!

-

ஜமா படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது.இளையராஜாவின் இசையில் 'ஜமா' பட முதல் பாடல் வெளியானது!

கடந்தாண்டு பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற கூழாங்கல் படத்தின் தயாரிப்பு நிறுவனமான லர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படம் தான் ஜமா. இந்த படத்தை பாரி இளவழகன் இயக்கி இதில் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். பாரி இளவழகனுடன் இணைந்து அம்மு அபிராமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து சேத்தன், ஸ்ரீ கிருஷ்ண தயாள், கே வி என் மணிமேகலை ஆகியோர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் 'ஜமா' பட முதல் பாடல் வெளியானது!இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார். கோபி கிருஷ்ணா படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய எம் ஏ பார்த்தா இதன் எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் அதைத் தொடர்ந்து டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்தது. இதற்கிடையில் ஜமா திரைப்படம் 2024 ஆகஸ்ட் 2ஆம் தேதி திரையிடப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் நீ இருக்கும் ஒசரத்துக்கு எனும் முதல் பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த பாடல்வரிகளை இசைஞானி இளையராஜா எழுதியிருக்கும் நிலையில் ராஜா கணபதி, ஸ்ரீஷா, பிரியா ஆகியோர் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ