ஜமா படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.
கடந்த 2023 ஆம் ஆண்டு பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் கூழாங்கல் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்றது. இந்த படத்தை லர்ன் அண்ட் டீச் ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரித்திருந்தது. அதைத் தொடர்ந்து இந்நிறுவனம் தற்போது ஜமா எனும் புதிய படத்தையும் தயாரித்துள்ளது. இந்தப் படத்தை பாரி இளவழகன் இயக்கியுள்ள நிலையில் அவரே கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார். பாரி இளவழகனுடன் இணைந்து இந்த படத்தில் அம்மு அபிராமி, சேத்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் கே வி என் மணிமேகலை, ஸ்ரீ கிருஷ்ண தயாள் ஆகியோரும் நடித்திருக்கின்றனர். கோபிகிருஷ்ணா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். எம் ஏ பார்த்தா எடிட்டிங் பணிகளை கவனித்துள்ளார். மேலும் இந்த படமானது இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. அதைத்தொடர்ந்து டீசர் வெளியிடப்பட்டிருந்த நிலையில் தற்போது இதன் ட்ரெய்லரும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
இந்த ட்ரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள நிலையில் ட்ரைலரானது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த ட்ரெய்லரை பார்க்கும்போது வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள ஜமா திரைப்படமானது ரசிகர்களின் பேராதரவை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 2ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.