ஹாலிவுட் அவதாரமாய் திரையில் ஜொலித்த அவதார் திரைப்படம் உலக சினிமாவின் முகமாக மாறியுள்ளது. பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில், கடந்த 1997 ஆம் ஆண்டு வெளியான ‘டைட்டானிக்’ என்ற திரைப்படத்தின் மூலம் உலகளவில் ரசிகர்களை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தார். இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு கடந்த 2009-ம் ஆண்டு அவதார் எனும் திரைப்படத்தை அறிவியல் புனை கதையில் ஆயிரம் கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இப்படம் அமெரிக்க டாலரில் ஏறத்தாழ 3 பில்லியன் அளவிற்கு வசூல் செய்து சாதனை படைத்தது. நிஜ வாழ்க்கையில் இருந்து பாண்டரா உலகத்திற்கு ரசிகர்களையும் சேர்த்தே அழைத்துச் சென்றார்.
இதையடுத்து ஜேம்ஸ் கேமரூன் 10 ஆண்டுகளுக்கு பிறகு மேலும் பல புதிய டெக்னலாஜிக்களை பயன்படுத்தி பிரம்மாண்டமான அவதார் 2 திரைப்படத்தை உருவாக்கினார். இந்தப் படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் வெளியாகி 2.3 பில்லியன் டாலர் வசூலை வாரிக்குவித்தது.
உலகளவில் வசூல் மழை பொழிந்த அவதார் படத்தின் 3-வது பாகம் டிசம்பர் 19 2025ம் ஆண்டு வெளியாகும் என ஜேம்ஸ் தெரிவித்துள்ளார். சிறந்த டீசரை வழக்குவதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், மூன்றாவது பாகத்தில் மற்றொரு புதிய உலகம் வித்தியாசமான கதை மற்றும் பல அதிரடி காட்சிகளை காணலாம் என்று உறுதி அளித்துள்ளார். அவதார் 4-ம் பாகம் 2029 ஆண்டிலும், பாகம் 5 2031-ம் ஆண்டிலும் வெளியாகும் என தெரிவித்து இருக்கிறார்.